உதறிவிட்டு பார்

எப்போதெல்லாம் நீ சிரமப்படுகிறாயோ அப்போதெல்லாம் அதற்காக யாரையும் குற்றம் சொல்லாதே.
அதன்மூலம் எந்த வேதனையும் படாதே. அதற்கு பதிலாக அதை பார், உணர்ந்து பார், கவனி, அதை எத்தனை கோணங்கள் உண்டோ அத்தனை கோணங்களிலும் பார்..

அதை ஒரு தியானமாக மாற்று,
என்ன நிகழ்கிறதென்று பார். நோய்க்குள் நகரும் அந்த சக்தி, சிரமத்தை உண்டாக்கும் அந்த சக்தி, மாறுதலடையும். குணம் மாறும்.

அதே சக்தி உனது விழிப்புணர்வாக மாறிவிடுகிறது.
ஏனெனில் உன்னுள் இரண்டு விதமான சக்திகள் இல்லை, இருப்பது ஒரே சக்திதான்.

எப்போதெல்லாம் சிரமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் உடனே உன்னை உதறி கொள். கண்களை மூடி அந்த சிரமத்தினுள் பார்.
அது என்னவாக இருந்தாலும் சரி – மனேரீதியாக, உடல் ரீதியாக, வெளிப்புறத்திலிருந்து – அது எதுவாக இருந்தாலும் அதனுள் பார், பறவை தன்மீதுள்ள நீரை உதறிவிடுவதைப் போல அதை உன்னிலிருந்து உதறி விடு.


30.jpg
அதை தியானமாக மாற்று. அதை ஒரு பொருளை பார்ப்பது போல பார்.

– ஓஷோ